யோ முதல் - யோனிவாய்ப்படுதல் வரை
சொல்
அருஞ்சொற்பொருள்
யோ ஓர் உயிர்மெய்யெழுத்து (ய்+ஓ) .
யோக்கியத்துக்குக்கொடுத்தல் ஒருவனது தகுதியின்மேல் ஆதாரமின்றிக் கடன்கொடுத்தல் .
யோக்கியதாபட்சம் தகுதிபற்றிய மதிப்பு .
யோக்கியதாபத்திரம் கல்வித்தேர்ச்சியைக் குறிக்கும் நற்சான்றிதழ் ; நல்லொழுக்கத்தைக் குறிக்கும் பத்திரம் .
யோக்கியதை தகுதி ; நேர்மை ; தொடரில் சொற்கள் பொருள்பொருத்த முற்றிருக்கை ; ஆற்றல் ; கல்வி , ஒழுக்கம் முதலியவற்றால் வருஞ் சிறப்பு ; பயன்படுத்தற்கேற்ற தன்மை .
யோக்கியம் தகுதி ; நேர்மை ; நன்மையானது ; ஒழுங்கானது ; தூய்மை .
யோக்கியன் தகுந்தவன் ; குணவான் ; பயன்படுபவன் .
யோகக்காட்சி யோகத்தாற் காணுமறிவு .
யோகக்காரன் நல்வினையாளன் .
யோகசத்தி நவச்சாரம் .
யோகசம்பந்தம் கூட்டம் , புணர்ச்சி .
யோகசமாதி ஆன்மா உடலையும் மனத்தையும் விட்டு நீங்கிநிற்கும் யோகநிலை .
யோகசரன் அனுமான் .
யோகசாதனம் யோகப்பயிற்சி .
யோகசாதனை யோகப்பயிற்சி .
யோகசித்தி யோகஞ் செய்ததனால் பெற்ற பேறு .
யோகதண்டம் யோகியின் கையிலுள்ள கோல் .
யோகதீட்சை யோகநெறியால் குரு சீடனது உடலுட்புகுந்து அவனது ஆன்மாவை ஈர்த்துச் சிவன் திருவடியிற் சேர்ப்பிக்கும் தீட்சைவகை ; தீட்சை ஏழனுள் நிராதாரயோகத்தைப் பயிற்றுவிக்கை .
யோகநித்திரை உறங்குவது போன்றிருந்தும் அறிவுற்றிருக்கும் யோகநிலை .
யோகநிலை யோகமுறையில் தியானத்தில் அமர்ந்திருக்கை .
யோகபரன் யோகசிந்தையுடையவன் .
யோகபாதம் கடவுளை அகத்தான் வழிபடும் நெறி ; யோகத்தைப்பற்றிக் கூறும் சிவாகமத்தின் இரண்டாம் பகுதி .
யோகம் சேர்க்கை ; புணர்ச்சி ; கூட்டல் ; நற்பேறு ; உயர்ச்சி ; ஊக்கம் ; தகுதி ; காரணப்பெயர் ; சூத்திரம் ; வழி ; மருந்து ; ஏமாற்று ; அரைப்பட்டிகை ; நற்சுழி ; காண்க : யோகு ; உணர்ச்சி ; கடவுளை அகத்தான் வழிபடுகையாகிய நெறி ; எண்வகைப்பட்ட யோகாப்பியாச அங்கங்கள் ; ஆறுவகை யோகங்கள் ; ஒவ்வொரு சிவாகமத்திலும் யோகத்தைப்பற்றிக் கூறுவதாயுள்ள இரண்டாம் பகுதி .
யோகமார்க்கம் யோகமுறை .
யோகர் யோகியர் ; முனிவர் ; சமணமுனிவர் .
யோகரூடி காரண இடுகுறி .
யோகவான் நற்பேறுபெற்றவன் .
யோகவிபாகம் ஒரு சூத்திரத்தில் ஒரு பகுதியைத் தனியே பகுத்து வேறு சூத்திரமாக்கிப் பொருள் கோடலாகிய நூற்புணர்ப்பு .
யோகாசனம் யோகத்திற்குரிய இருக்கை ; முழங்காலிட்டுக் குந்தியிருக்கும் இருப்பு .
யோகாதிசயம் இன்பநிலை .
யோகி யோகப்பயிற்சியுடையவன் ; சன்னியாசி ; சிவன் ; அருகன் ; முனிவன் ; உடலை வளைக்க உதவும் தசை ; ஐயனார் .
யோகித்தல் தியானித்தல் .
யோகிப்பு தியானம் .
யோகினி மந்திரவாதந் தெரிந்தவள் ; காளியின் ஏவல்செய் மகளிர் ; தெய்வப்பெண் ; காளி ; தேவதை .
யோகினிச்சி வரிக்கூத்துவகை .
யோகீசுவரன் யோகத்தில் வல்லவன் .
யோகு ஆழ்ந்த தியானம் .
யோசனம் காண்க : யோசனை .
யோசனவல்லி மஞ்சிட்டிவேர் ; வல்லாரை .
யோசனன் கடவுள் .
யோசனை சிந்தனை ; கருத்து ; புத்திமதி ; வழிவகை ; அறிவுக்கூர்மை ; நான்கு குரோசங் கொண்ட நீட்டலளவை ; ஓசை .
யோசனைக்காரன் முன்னாலோசனை உடையவன் .
யோசனைசாலி கூரிய அறிவினன் .
யோசித்தல் ஆராய்தல் ; சேர்த்தல் ; சிந்தித்தல் ; ஆலோசனை கேட்டல் .
யோதனம் போர் .
யோனி பெண்குறி ; பிறப்பிடம் ; கருப்பப் பை ; பிறவி ; காரணம் ; காண்க : ஆவுடையார்(ள்) ; ஒரு நாடகவுறுப்பு ; பூரநாள் ; நீர் .
யோனிப்படுதல் பிறத்தல் .
யோனிப்பொருத்தம் மணப்பொருத்தம் பத்தனுள் ஒன்று .
யோனிபேதம் எண்பத்துநான்கு நூறாயிரமாகக் கூறப்படும் பிறப்புவகை .
யோனிலிங்கம் பெண்குறியின் ஓர் உள்ளுறுப்பு .
யோனிவாய்ப்படுதல் காண்க : யோனிப்படுதல் .