ஐயாறப்பர் கோவில் - திருவையாறு

பஞ்ச நதீஸ்வர் சந்நிதி முகப்பு வாயிலின் முன்னுள்ள ஒரு கல்வெட்டு வள்ளல் பச்சையப்பரின் அறக்கட்டளையை உணர்த்துகிறது. “இக்கட்டளை மூலம் ஒரு லட்சம் வராகன், முதல் தொகையாக வைக்கப்பட்டு அதிலிருந்து வரும் வட்டித்தொகையிலிருந்து ;

  1. பஞ்ச நதீஸ்வரர் நித்திய கட்டளை நடைபெறவும்.

  2. மதுரைத் திருஞானசம்பந்தர் ஆதீனத்தில் அன்னதானம் மகேஸ்வர பூசையும் நடைபெறவும்.

  3. இந்துக் குழந்தைகளுக்கு, இந்து விவகார சாஸ்திரங்களையும் ஆங்கிலப் பாடத்தையும் போதிப்பதற்கு ஒரு பண்டிதரையும், ஒரு ஆசிரியரையும் நியமித்து அவர்களுக்கு ஊதியம் தரவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள செய்திகளை இக்கல்வெட்டுச் செய்தி விளம்பரப் படுத்துகிறது. கோயிலுக்குப் பக்கத்தில் சற்றுதள்ளி, தியாகப் பிரம்மத்தின் சமாதி உள்ளது. சாலையிலேயே இதற்கான வளைவு கட்டப்பட்டுள்ளது. சென்று தரிசிக்கலாம்.

“புலன் ஐந்தும் பொறி கலங்கி நெறி மயங்கி
    அறிவு அழிந்திட்டு ஐம்மேல் உந்தி
அலமந்த போதாக அஞ்சேல் என்று
    அருள் செய்வான் அமருங்கோயில்
வலம் வந்த மடவார்கள் நடமாட
    முழவு அதிர மழையென்று அஞ்சிச்
சில மந்தி அலமந்து மரமேறி
    முகில் பார்க்கும் திருவையாறே.”
                                             (சம்பந்தர்)

“உற்றார் இலாதார்க்கு உறுதுணையாவன ஓதி நன்னூல்
கற்றார் பரவப் பெருமையுடையன காதல் செய்ய
கிற்பார் தமக்குக் கிளரொளி வானகந்தான் கொடுக்கும்
அற்றார்க்கு அரும் பொருள் காண்க ஐயாறன் அடித்தலமே.”

‘எல்லா உலகமும் ஆனாய் நீயே, ஏகம்பம் மேவியிருந்தாய் நீயே
நல்லாரை நன்மை அறிவாய் நீயே, ஞானச்சுடர் விளக்காய்
                 நின்றாய் நீயே
பொல்லா வினைகள் அறுப்பாய் நீயே, புகழ்ச்சேவடி
             என்மேல்வைத்தாய் நீயே
செல்வாய செல்வந்தருவாய் நீயே, திருவையாறு அகலாத
                செம்பொற் சோதீ.”
                                                               (அப்பர்)

“பிழைத்த பிழை யொன்றறி யேனான் பிழையைத்தீரப்பணியாயே
மழைக்கணல்லார் குடைந்தாட மலைவு நிலனுங் கொள்ளாமைக்
கழைக் கொள் பிரசங் கலந்தெங்குங் கழனி மண்டிக்கையேறி
இழைக் குந்திரைக் காவிரிக் கோட்டத்தையாறுடைய அடிகளோ.”
                                                          (சுந்தரர்)

“குந்தி நடந்து குனிந்தொரு கைகோலூன்றி
நொந்திருமி நுரைத்தேறி - வந்துந்தி
ஐயாறு வாயாறு பாயா முன் நெஞ்சமே
ஐயாறு வாயால் அழை.”
                                          (ஐயடிகள் காடவர் கோமான்)
                - பண்பகன்ற

வெய்யாற்றில் நின்றவரை மெய்யாற்றில் ஏற்று திரு
வையாற்றின் மேவிய என் ஆதரவே.
                                                              (அருட்பா)

அஞ்சல் முகவரி :-
அ/மி. பஞ்சநதேஸ்வரர் திருக்கோயில்
திருவையாறு - அஞ்சல் 613 204.
திருவையாறு வட்டம், தஞ்சை மாவட்டம்.

முன்