ஊர்த்வ தாண்டீஸ்வரர்கோவில் - திருவாலங்காடு

கல்வெட்டில் நடராசப் பெருமானின் பெயர் ‘அரங்கில் அண்டமுற நிமிர்ந்தருளிய நாயனார்’ என்று குறிக்கப்பட்டுள்ளது.

“கேடும்பிறவியும் ஆக்கினாரும் கேடிலா
வீடுமாநெறி விளம்பினார்எம் விகிர்தனார்
காடுஞ்சுடலையும் கைக்கொண்டு அல்லில்கணப்பேயோ(டு)
ஆடும் பழையனூர் ஆலங்காட்டுஎம் அடிகளே.”(சம்பந்தர்)

“ஒன்றா உலகனைத்தும் ஆனார்தாமே
ஊழிதோறூழி உயர்ந்தோர் தாமே
நின்றாகி எங்கு(ம்) நிமிர்ந்தார் தாமே
நீர் வளிதீ ஆகாசம் ஆனார்தாமே
கொன்றாடுங் கூற்றை உதைத்தார் தாமே
கோலப் பழனையுடையார் தாமே
சென்றாடு தீர்த்தங்கள் ஆனார்தாமே
திருஆலங்காடுறையும் செல்வர் தாமே.” (அப்பர்)

“முத்தாமுத்திதரவல்ல முகிழ்மென்முலையாள் உமைபங்கா
சித்தாசித்தித் திறங்காட்டுஞ் சிவனே தேவர்சிங்கமே
பத்தாபத்தர் பலர்போற்றும்பரமா பழையனூர்மேய
அத்தா ஆலங்காடா உன் அடியார்க்கு அடியேன் ஆவேனே.”                 (சுந்தரர்)

            -“சொற்போரில்
ஓலங்காட்டும் பழையனூர் நீலிவாதடக்கும்
ஆலங்காட்டிற் சூழ்அருள்மயமே.”     (அருட்பா)
.

வடிவது நீலங்காட்டி முடிவுளகாலன்கூட்டி
வரவிடு தூதன் கோட்டி             -விடுபாசம்
மகனொடுமா மன்பாட்டிமு தலுறவோருங்கேட்டு
மதிகெட மாயந்தீட்டி             -யுயிர்போமுன்
படிமிசை தாளுங்காட்டியுடலுறு நோய் பண்டேற்ற
பழவினை பாவம் தீர்த்து          -னடியேனைப்
பரிவொடு நாளுங்காத்து விரிதமிழாலங்கூர்த்த
பரபுகழ் பாடென்றாட்கொ          -டருள்வாயே
முடிமிசைசோமன் சூட்டி வடிவுள ஆலங்காட்டில்
முதிர் நடமாடுங் கூத்தர்         -புதல்வோனே
முருகவிழ்தாருஞ் சூட்டி யொருதனி வேழங்காட்டி
முதல் மறமானின் சேர்க்கை          -மயல்கூர்வாய்
இடியென வேகங்காட்டி நெடிதரு சூலந்தீட்டி
யெதிர் பொருசூரன் தாக்க             -வரஏகி
இலகிய வேல் கொண்டார்த்து உடலிருகூறன்றாக்கி
யிமையவரேதந் தீர்த்த             -பெருமாளே.

அஞ்சல் முகவரி :-
அ/மி. வேதகீரீஸ்வரர் திருக்கோயில்
திருக்கழுக்குன்றம் & அஞ்சல்
காஞ்சிபுரம் மாவட்டம். 603 109.

முன்