மூலவர்
ஸ்ரீபரமஸ்வாமி, பஞ்சாயுதங்களுடன் ஸ்ரீதேவி பூதேவி சூழ
பிரயோகச் சக்கரத்துடன் கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலம்.
தாயார்
சுந்தரவல்லி, ஸ்ரீதேவி என்ற பெயரும் உண்டு.
உற்சவர்
சுந்தரராஜன், கள்ளழகர் என்னும் திருநாமம். இங்கு உற்சவர்
மிகவும். பேரழகு வாய்ந்தவர். இந்த உற்சவர் அபரஞ்சியால்
செய்யப்பட்டவர். இந்தியாவிலேயே இங்கும் திருவனந்தபுரத்திலும்
மட்டுமே அபரஞ்சியால் செய்யப்பட்ட உற்சவர்கள் உள்ளனர்.
சோலைமலைக்கரசர் என்றே திவ்ய பிரபந்தம் இந்த உற்சவமூர்த்தியை
வர்ணிக்கிறது. புராணம். “ரிஷபாதிஷர்” என்று அழைக்கிறது. மூலவரை
விட உற்சவர் பெரும் புகழ் பெற்ற ஸ்தலங்களுள் இதுவும் ஒன்று.
இங்கு உற்சவரும் பஞ்சாயுதங்களுடன் திகழ்கிறார்.
தீர்த்தம்
நூபுரகங்கை என்னும் சிலம்பாறு
ஸ்தலவிருட்சம்
வ்ருஷபகிரி. சந்தன விருட்சம்
விமானம்
ஸோம ஸந்த விமானம்
காட்சி கண்டவர்கள்
மலயத்வஜ பாண்டியன், எமன், தர்மதேவதை.