ஆதிகேசவப்பெருமாள் கோவில் - அஷ்டபுயகரம்

வரலாறு

பண்டைப் புராணங்கள் பலவும் இத்தலம் பற்றிப் பேசுகின்றன.

பிரம்மன் செய்யும் யாகத்தை நிலைநிறுத்த எம்பெருமான்
பலவாறாக உதவி, பாதுகாத்துக் கொண்டிருக்க மேலும் அதனை
நிலைகுலைக்க எண்ணிய நாமகள் பயங்கர ரூபத்துடனான காளியைப்
படைத்து அவளுடன் கொடிய அரக்கர்களையும் அனுப்பினாள்.
காளியின் கொட்டத்தை அடக்கி உடன்வந்த அரக்கர் கூட்டத்தை
முறியடிக்க எம்பெருமான் 8 கரங்களுடன் தோன்றி அரக்கர்களை
அழித்து காளியை அடக்கினார். அதனால் அட்டபுயக்கரத்தோன்
ஆனார். வலப்புறம் நான்கு கைகள் இடப்புறம் நான்கு கைகள் என 8
கைகளுடன் நிற்கிறார். அட்டபுயகரத்தோனாக ஆகும் முன்பே
(இவ்விடத்தில் ஆதிகேசவப் பெருமாள் என்னும் பெயரில் பெருமாள்
எழுந்தருளியிருந்ததாகவும் அவரே அட்ட புயக்கரமாக வந்தாரென்றும்
ஒரு வரலாறும் உண்டு)

முன் பின்