ஆண்டளக்குமையன் கோவில் - திருஆதனூர்

    “என்னை மனங்கவர்ந்த ஈசனை - வானவர்தம்
    முன்னவனை மூழிக்களத்து விளக்கினை
    அன்னவனை ஆதனூர் ஆண்டளக்கும் ஐ யனை”
    பெரிய திருமடல் 126 - 129 (2674)
        என்பது மங்கையாழ்வார்,

இப்பெருமானை பாடிப்பரவும் பாசுரமாகும். இத்தலம் சுவாமி
மலையிலிருந்து     சுமார்     3 கி.மீ.     தொலைவு     உள்ளது.
கும்பகோணத்திலிருந்து 8 கி.மீ. தொலைவு உள்ளது. இந்த ஊருக்கு
நேராகவே பேருந்து வசதி உள்ளது இத்தலத்து எம்பெருமானைச்
சேவித்துவிட்டு இங்கிருந்து புள்ளம் பூதங்குடி திவ்ய தேசத்திற்கு
நடந்தே சென்றுவிடலாம்.

பின்