தையலாள் மேல் காதல் செய்த
தாளவன் வாளரக்கன்
பொய்யிலாத பொன்முடிக
ளொன்ப தோ டொன்றும் அன்று
செய்த வெம்போர் தன்னிலங்கோர்
செஞ்சரத் தாளூருள
எய்த வெந்தை யெம்பெருமா
னெல்வுள் கிடந்தானே (1059)
பெரியதிருமொழி 2-2-2
இராவணனைக் கொன்ற இராமபிரான் தான் எவ்வுள்ளில்
கிடக்கிறாரென்று திருமங்கையாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட
இத்தலத்திற்கு சென்னையிலிருந்து எண்ணற்ற பேருந்துகள் உண்டு.
சென்னையில் இருந்து திருப்பதி செல்லும் பேருந்துகள் பலவும் இவ்வூர்
வழியாகவே செல்கின்றன. மிக விரைந்து வளர்ந்து கொண்டிருக்கும்
பிரதானமான நகரமாகத் திகழ்கிறது இந்நகரம்.