சியாமளமேனிப் பெருமாள் கோவில் - திருக்கண்ணங்குடி
மூலவர்

லோகநாதன். சாம மாமேனிப் பெருமாள் என்பர். அதாவது ச்யாமள
மேனி. (நீலமேகவண்ணன்) நின்ற திருக்கோலம், கிழக்கே திருமுக
மண்டலம்.

தாயார்

லோகநாயகி

உற்சவர்

தாமோதர நாராயணன், ஸ்ரீதேவி, பூதேவி உடன் இடது கையை
இடுப்பில் கொண்டு (கண்ணன் நிற்கும் கோலம் போல)

விமானம்

உத்பல வதாக விமானம்

தீர்த்தம்

சிரவண புஷ்கரிணி, பெயரைக் கேட்ட மாத்திரத்திலேயே சகல
பாபங்களையும் போக்கவல்லதால் இப்பெயர் பெற்றது. இன்றும்
காண்பதற்கு பேரெழில் வாய்ந்தது.

ஸ்தல விருட்சம்

மகிழ மரம் (வகுளம்)

காட்சி கண்டவர்கள்

பிரம்மன், கௌதமர், உபரிசரவசு, வசிட்டர், ப்ருகு, மாடரர்,
திருமங்கையாழ்வார்.

முன் பின்