சௌரிராசப்பெருமாள் கோவில் - திருக்கண்ணபுரம்

    “இல்லையலல் எனக்கேல் இனியென்குறை
    அல்லி மாத ரமரும் திரு மார்பினன்
    கல்லிலேயந்த மதில் சூழ் திருக்கண்ணபுரம்
    சொல்ல நாளும் துயர் பாடு சாரவே”
         திருவாய்மொழி 9-10-10 (3665)

திருக்கண்ணபுரத்தில் எழுந்தருளியுள்ள பெருமானின் பெயரைச்
சொன்ன மாத்திரத்திலே எனது துயர்கள் எல்லாம் பாழடைந்துவிட்டன.
இனிமேல் எனக்கு என்ன குறையுள்ளது என்று நம்மாழ்வார்
வினவக்கூடிய இத்தலத்திற்குத், திருவாரூரிலிருந்து கோயில் வாசல் வரை
பேருந்து செல்கிறது. நன்னிலத்திலிருந்து நாகப்பட்டினம் செல்லும்
வண்டியிலேறி திருப்புகலூர் என்ற ஊரில் இறங்கி சுமார் ஒருமைல்
தூரம் நடந்து சென்றும் இப்பதியை எய்தலாம்.

பின்