புருடோத்தமப்பெருமாள் கோவில் - திருக்கரம்பனூர்

பேரானைக் குறுங்குடி யெம் பெருமானைத் திருத்தண்கா
    லூரானைக் கரம்பனூர் உத்தமனை முத்திலங்கு
காரார் திண்கடலேழும் மலையேழிவ் வுலகுண்டும்
    ஆராதென் றிருந்தானைக் கண்டது தென்னரங்கத்தே.
            (1399) பெரிய திருமொழி 5-6-2

என்று திருமங்கையாழ்வாரால் பாடப்பட்ட இத்தலம் திருச்சியிலிருந்து
வடக்கே நான்கு மைல் தொலைவில் கொள்ளிட நதிக்கரையில் உள்ளது.
ஸ்ரீரங்கத்திலிருந்து ஒரு மைல் தூரம். திருச்சியிலிருந்து துறையூர்,
மணச்ச நல்லூர் செல்லும் பேருந்துகள் இக்கோவிலைக் கடந்துதான்
செல்ல வேண்டும்.

பின்