திருவிக்கிரமப்பெருமாள் கோவில் - திருக்கோவலூர்

    நீயும் திருமகளும் நின்றாயால் குன்றெடுத்துப்
    பாயும் பணிமறைத்த பண்பாளா - வாயில்
    கடைகழியா வுள்புகா காமர் பூங்கோவல்
    இடைகழியே பற்றியினி - (2167)
         முதல் திருவந்தாதி - 86

என்று பொய்கையாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட
இத்திருக்கோவலூர் தென்னாற்காடு மாவட்டத்தில்     உள்ளது.
கடலூரிலிருந்து பேருந்து வசதிகள் உண்டு. விழுப்புரம்-காட்பாடி
ரயில்பாதையில் திருக்கோவலூர் ஒரு நிலையமாகும். திருச்சியிலிருந்து
வேலூர் செல்லும் பேருந்துகள் இவ்வூர் வழியாகச் செல்கின்றன.

பின்