திருவிக்கிரமப்ளெபருமாள் கோவில் - திருக்கோவலூர்
மூலவர்

திரு விக்ரமன் - ஒரு காலைத் தரையில் ஊன்றி ஒரு காலை
விண்ணை நோக்கித் தூக்கிய நிலை. கிழக்கு நோக்கி நின்ற
திருக்கோலம்.

இப்பெருமான் விராட் புருஷனாக இடது கையில் சக்கரம், வலது
கையில் சங்கும் கொண்டு நீருண்ட மேகம் போன்ற திருமேனியுடன்
மார்பில் ஸ்ரீவத்ஸம், கண்டத்தில் கௌஸ்துபம், காதுகளில்
மஹாகுண்டலம், வைஜயந்தி வனமாலையுடன் தேஜோமயமாய் ஒளிரும்
புன்னகையுடன் சுற்றியும் பிரகலாதன், மகாபலி, சுக்ராச்சார்யார்,
தேவர்கள், யட்சர்கள், சித்தர்கள், கருட வில்வக்ஸேநர் புடை சூழ
ஸ்ரீதேவி, பூதேவி சமேதராய் எழுந்தருளியிருக்கிறார்.

உற்சவர்

ஆயன், ஆயனார், கோவலன் (கோபாலன்)

தாயார்

பூங்கோவல் நாச்சியார், புஷ்பவல்லி தாயார் என்னும் திருநாமங்கள்.

தீர்த்தம்

பெண்னையாறு, கிருஷ்ண தீர்த்தம், சுக்ர தீர்த்தம்.

விமானம்

சுர விமானம்

காட்சி கண்டவர்கள்

மகாபலி, மிருகண்டு முனிவர், பிரம்மன், இந்திரன், குஷி, சௌனகர்,
காஸ்யபர், முதல் மூன்று ஆழ்வார்கள்.

முன் பின்