அருமாகடல் பெருமாள் கோவில் - திருச்சிறுபுலியூர்

கருமாமுகிலுருவா, கனலுருவா புனலுருவா
    பெருமாள் வரையுருவா, பிறவுருவா, நினதுருவா
திருமாமகள் மருவும் சிறுபுலியூர்ச் சலசயனத்து
    அருமா கடலமுதே உனதடியே சரணாமே
         - பெரிய திருமொழி 7-9-9 (1636)

கரிய மேக உருவானவனே, நீர், நெருப்பு, மலை, மற்றும்
முவ்வுலகத்து அனைத்துருவங்களிலும், உறைபவனே, திருமகள் விரும்பி
உறையும் சிறுபுலியூர்த் தலத்துறையும் அருட்கடலாகிய அமுதமே உனது
திருவடிகளே எனக்கு அடைக்கலமென்பது திருமங்கை மன்னனின்
திவ்ய கவி.

இடம்

இத்தலம் தஞ்சை மாவட்டத்தில் உள்ளது. மயிலாடுதுறையிலிருந்து
(மாயவரம்) நகரப்பேருந்தில் ஏறிச்சென்று கொல்லுமாங்குடி என்ற
சிற்றூரில் இறங்கி 2 மைல் நடந்து சென்றால் இத்தலத்தை அடையலாம்.
இந்த ஊர் மிகச் சிறிய கிராமம் என்பதால் யாத்ரீகர்கள் தங்குவதற்கு
யாதொரு     வசதியுமில்லை.     எனவே     மயிலாடுதுறையிலிருந்து
அதிகாலையில் புறப்பட்டு இறைவனை வழிபட்டு நண்பகலுக்குள்
திரும்பிவிடலாம்.

பின்