விண்ணகரப்பெருமாள் கோவில்
திருநந்திபுர விண்ணகரம்

தம்பியொடு தாமொருவர் தந்துணைவி
    காதல் துணை யாக முனநாள்
வெம்பியெரி கானகமு லாவுமவர்
    தாமினிது மேவு நகர்தான்
கொம்புகுதி கொண்டு குயில் கூவ
    மயிலாலு மெழிலார் புறவு சேர்
நம்பியுறை கின்ற நகர் நந்தி புர
    விண்ணகரம் நன்னு மனமே
        (1443) பெரிய திருமொழி 5-10-6

மரக்கொம்புகளில் தமது தோகைகளை அசைத்து அசைத்து
குயில்கள் கூவ, மயிலினங்கள் ஆடிக்கொண்டிருக்க எழில் நிறைந்த
பொழில் சூழ்ந்த சோலைகளால் சூழப்பட்ட இந்த நந்திபுர
விண்ணகரத்தில்தான் தன் மனைவியொடும் தம்பியொடும் கொடிய
கானகமெல்லாஞ் சுற்றித்திரிந்த ராம்பிரான் உறைகிறான் என்று
திருமங்கையாழ்வாரால் பாடப்பட்ட இத்தலம் கும்பகோணத்திற்கு
தெற்கே சுமார் 3 மைல் தொலைவில் உள்ளது.

நாதன் கோவில் என்றால்தான் எல்லோருக்கும் தெரியும்
கும்பகோணத்திலிருந்து கொருக்கை என்னும் ஊருக்கு வந்து
அங்கிருந்து 11/2 மைல் நடத்தும் இத்தலத்தையடையலாம்.

வலங்கை மானிலிருந்தும் இதே தொலைவுதான்.

பின்