அப்பக்குடத்தான் கோவில் - திருப்யர் நகர்

பேரேயுறைகின்ற பிரான் இன்று வந்து
    பேரேனேன்று என்னெஞ்சு நிறையப் புகுந்தான்
காரேழ் கடலேழ் மலையேழ்லுல குண்டும்
    ஆராவயிற்றானை அடங்கப் பிடித்தேனே (3745)
            திருவாய்மொழி 10-8-2

என்று     நம்மாழ்வாரால் பாசுரஞ் சூட்டப்பட்ட இத்தலம்
திருச்சியிலிருந்து 15 மைல் தொலைவில் உள்ளது. அன்பில் திவ்ய
தேசத்திலிருந்து கொள்ளிட நதியின் மறுகரையைச் சேர்ந்தால்
இத்தலத்தை அடையலாம். பூதலூர் ரயில் நிலையத்திலிருந்து சுமார்
8கி.மீ. கல்லணையில் இருந்து 4 மைல் தொலைவிலும் உள்ளது.

திருப்பேர் நகர் என்றால் யாருக்கும் தெரியாது. கோவிலடி என்று
சொன்னாலே எல்லோருக்கும் தெரியும். இயற்கையின் அரவணைப்பில்
மிகவும் ரம்மியமான சூழ்நிலையில் அமைந்துள்ள அழகான தலமாகும்
இது.

பின்