மணிக்குடி நாயகன் கோவில் - திருமணிக்கூடம்

கெண்டையும் குறளும் புள்ளும்
    கேழலும் மரியும் மாவும்
அண்டமும் சுடரும் அல்லா
    ஆற்றதுமாய எந்தை
ஒண்டிறல் தென்ன னோட
    வடவர சோட்டங்கண்ட
திண்டிற லாளர் நாங்கூர்த்
    திருமணிக் கூடத்தானே - (1293)
         பெரிய திருமொழி 4-5-6

என்று திருமங்கையாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட
இத்தலம் திருநாங்கூரிலிருந்து கிழக்கே சுமார் 4 பர்லாங் தூரத்தில்
உள்ளது. திருமணிக்கூடம் என்ற சொல்லுக்கேற்ப இத்தலம்
மணிக்கூடம் போன்ற அமைப்பில் கட்டப்பட்டுள்ளது.

பின்