ஆமருவியப்பப்பெருமாள்கோவில் -திருவழுந்தூர்

வரலாறு

இத்தலத்தைப் பற்றி விஷ்ணு புராணம் மிகவும் சிலாகித்துப்
பேசுகிறது. இதைப்பற்றி பல புராண வரலாறுகள் இருப்பினும் விஷ்ணு
புராணத்தில்    வரும்    கீழ்க்கண்ட    கதையே    பிரதானமாக
எடுக்கப்பட்டுள்ளது.

காகுலத்தில் கோபாலர்களுடன் பசுக்களை மேய்த்துக் கொண்டிருந்த
கண்ணன். ஒரு நாள் பசுமந்தையை, ஓரிடத்தில் நிறுத்தி விட்டு யமுனை
நதிக்குச்    சென்றிருந்த    போது,    அப்பசுமந்தையை    பிரம்மா
தேரழுந்தூருக்கு ஓட்டி வந்து விட்டதாகவும், இச்செயல் அறிந்த மாயக்
கண்ணன். உடனே அதே போன்ற பசுமந்தையை அவ்விடத்திலே
படைத்து விட, தன் தவறை உணர்ந்த பிரம்மா கண்ணன் முன் தோன்றி,
தேரழுந்தூரில் கோயில் கொள்ள வேண்டுமென்று விண்ணப்பிக்க,
அதையேற்று “ஆமருவி நிரை மேய்க்கும் அமரர் கோமானாக”
வந்தமர்ந்தான் என்பது வரலாறு. இதற்குச் சான்றாக இங்குள்ள உற்சவப்
பெருமாளுக்கு முன்புறம் கன்றும் பின்புறம் பசுவும் அமைந்துள்ள
பேரழகும் எழுத்தில் அடக்கும் தன்மை பெற்றதல்ல.

முன் பின்