ஒப்பிலியப்பன் கோவில் - திருவிண்ணகர்


பண்டெல்லாம் வேங்கடம் பாற்கடல் வைகுந்தம்
கொண்டாங் குறைவார்க்கு கோயில் போல்
வண்டு வளங்கிளரு நீள் சோலை வண்பூங்கடிகை
இளங்குமரன் தன் விண்ணகர்.
         (2342) மூன்றாந் திருவந்தாதி - 61

முன்பு வைகுண்டத்திலிருந்த திருமால், அடியார்கட்கு அருள்புரியும்
பொருட்டு திருவேங்கடம் திருப்பாற்கடல், அழகிய புஷ்பங்களில்
வண்டுகள் கிளரக்கூடிய திருக்கடிகை, திருவிண்ணகர் ஆகிய திவ்ய
தேசங்களில் இளமை குன்றாது திகழ்கின்றான் என்று பேயாழ்வாரால்
திருவாய்    மலர்ந்தருளப்பட்ட     இந்த    திருவிண்ணகர்
கும்பகோணத்திலிருந்து சுமார் 3 1/2 மைல் தொலைவில் உள்ளது.
பேருந்து வசதிகள் ஏராளம்.

பின்