ஆறினோடொரு நான்குடை நெடுமுடியரக்கன்றன் சிரமெல்லாம்
வேறுவேறுக வில்லது வளைத்தவனே யெனக்கருள் புரியே
மாறில் சோதிய மரகதப் பாசடை தாமரைமலர் வார்த்த
தேறல் மாந்தி வண்டின்னிசை முரல் திருவெள்ளறை நின்றானே
(1374) பெரியதிருமொழி 5-3-7
என்று இராமவதார மகிமையில் மூழ்கி இயற்கை எழிலோடு இயைந்த
திருவெள்ளறை நின்ற பெருமாளைப் போற்றுகிறார், திருமங்கையாழ்வார். இத்திருவெள்ளறை திருச்சியிலிருந்து 13 மைல் தொலைவில் துறையூர் செல்லும் பாதையில் உள்ளது.
|