முகுந்த நாயகன் கோவில் - திருவேளுக்கை

விண்ணகரம் வெஃகா விரிதிரை நீர் வேங்கடம்
    மண்ணகரம் மாமாட வேளுக்கை மண்ணகத்த
தென்குடந்தை தேனார் திருவரங்கம் தென் கோட்டி
    தன் குடங்கை நீரேற்றான் தாழ்வு - (2343)
            மூன்றாந்திருவந்தாதி - 62

என்று     எம்பெருமான் எழுந்தருளியுள்ள திவ்யதேசங்களை
மறக்கவொன்னா     மனப்பாங்கினால் மன்னு தமிழ்ப்பாக்களால்
மங்களாசாசனம் செய்யும்போது மண்ணகரம் மாமாட வேளுக்கை என்று
பேயாழ்வாரால் பாடிப் பரவசிக்கப்பட்ட இத்தலம் காஞ்சிபுரத்திலேயே
விளக்கொளி     பெருமாளின்     திருக்கோவிலிலிருந்து இடதுபுறம்
செல்லக்கூடிய சாலையில், மூன்று தெருக்களைக் கடந்து பிரகாசமாகத்
தென்படுகிறது.     அட்டபுயக்கரத்தான் சன்னதியிலிருந்து அரை
கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.

பின்