முகுந்த நாயகன் கோவில் - திருவேளுக்கை

வரலாறு

வேள் என்ற சொல்லுக்கு ஆசை என்று பொருள். நரசிம்ம மூர்த்தி
இவ்விடத்தில் ஆசையுடன் இருக்க எண்ணியதால் வேளிருக்கை
என்றாகி காலப் போக்கில் வேளுக்கை ஆகிவிட்டது.

எம்பெருமான் நரசிம்ம அவதாரம் எடுத்த காலை ஹஸ்திசைலம்
என்னும் குகையிலிருந்து புறப்பட்டு இரண்யனது மாளிகையின்
தூணிலிருந்து வெளிப்பட்டபோது வேறொரு நரசிம்ம வடிவங்கொண்டு
தம்மைத் தாக்க வந்த அசுரங்களை விரட்டிக் கொண்டே செல்ல
இவ்விடத்திற்கு வந்தது அசுரக் கூட்டங்கள் கண்காணா இடத்திற்கு ஓடி
ஒளிந்து கொண்டதால், இனி அசுரர்கள் வந்தாலும் அவர்களை
எதிர்ப்பதற்கு இவ்விடமே பொருத்தமானது என்றெண்ணி, இவ்விடத்தின்
எழிலில் பற்றுக் கொண்டு இங்கேயே இருக்க ஆசைப்பட்டார்.
இவ்விடத்திலேயே யோக நரசிம்மராகி அமர்ந்து விட்டார். காமாஷிகா
நரசிம்ம சன்னதி என்றும் இதற்கொரு பெயருண்டு.

முன் பின்