ஆரோக்கிய அன்னை பேராலயம்-திருச்சி

சென்னை செயின் ஜார்ஜ் கோட்டையிலுள்ள செயின்ட் மேரி தேவாலயம் தன் பின்னணியில் மிகப்பெரிய வரலாற்றைக் கொண்டிருக்கிறது. வரலாற்று ஆய்வாளர்களுக்கும் ஆர்வலர்களுக்கும் இது மிகவும் பிடித்தமான இடமாகவும் அமைந்துள்ளது. தனக்கெனத் தனிச் சிறப்பிடத்தைப் பெற்றுள்ள இந்த ஆலயம் ‘வெஸ்ட்மினிஸ்டர் அப்பே’ தேவாலயத்திற்கு இணையாகச் சொல்லப்படுகிறது. கிழக்குநாடுகளின் ‘வெஸ்ட் மினிஸ்டர் அப்பே’ எனவும் குறிப்பிடப்படுகிறது. சென்னையிலுள்ள மிகப்பழமையான கட்டிடங்களில் ஒன்று இது. ஆசியாவில் உருவான முதல் ஆங்கிலிகன் தேவாலயம் இதுதான். செயின்ட் மேரியின் பெயரில் அமைந்துள்ள இந்த ஆலயப்பணி கன்னிமரியாளிடம் தேவதூதர் வந்து ஏசுவின் பிறப்பை உணர்த்திய புனித நாளில் தொடங்கப்பட்டது. இந்த ஆலயத்தை எட்வர்ட் பவுலே என்ற கட்டிடக்கலை நிபுணர் வடிவமைத்தார். இதனை வில்லியம் டிக்சன் என்பவர் கட்டினார். இக்கட்டிடம் குண்டுகளால் சிதைக்கப்பட முடியாத கட்டிட அமைப்பைக்கொண்டது. இதன் மேற்பூச்சு பளபளப்பாக அமைந்துள்ளது. கட்டப்பட்ட மூல வடிவத்துடன் ஒட்டிப் பிற்காலத்தில் கட்டிடம் வளர்க்கப்பட்டது. நடுவிலுள்ள கோபுரம், ஆடைகள் வைப்பதற்கான அறை, புனித அறை, பிறபக்கக்கோபுரங்கள், கூர்மையான கோபுரம் ஆகியன கட்டப்பட்டன.

    ஆலயத்தின் உட்புறம் மரவேலைப்பாடுகளையும் கண்ணாடி வேலைப்பாடுகளையும் கொண்டுள்ளது. உள்ளே அமைந்துள்ள ஓவியங்கள் பல. அவற்றில் பெயர் தெரியாத ஓவியரால் உருவாக்கப்பட்ட ‘கடைசி இரவு உணவு’ ஓவியம் நெஞ்சை அள்ளக்கூடியது.