Primary tabs
-
4.7 தொகுப்புரை
தமிழக நாட்டுப்புற மரபில் காலங்காலமாக நிகழ்த்தப்பட்டு வரும் நாட்டுப்புற நிகழ்த்து கலைகள் பற்றிய பல்வேறு கருத்துகளை இப்பாடம் தொகுத்துக் கூறியுள்ளது. நாட்டுப்புற வழிபாடும் கலைகளும் இரண்டறக் கலந்து தமிழ்ப் பண்பாட்டின் அங்கமாய் விளங்கிவரும் நிலை சிறப்பாக எடுத்துக் காட்டப்பட்டு இருப்பதையும் நீங்கள் அறிவீர்கள். நாட்டுப்புற நிகழ்த்து கலைகள் வெறும் பொழுதுபோக்கிற்கானவை மட்டுமல்ல. அவை தமிழ்ப் பண்பாட்டின் சொத்து; தமிழர் மரபின் அடையாளம் என்பதையும் உணர்ந்திருப்பீர்கள். நாட்டுப்புற நிகழ்த்து கலைகளைப் பாடமாகப் பயில்வதோடு மட்டுமல்லாமல் அவற்றைப் பாதுகாக்கவும் பரப்பவும் நீங்கள் முன்வர வேண்டும். என்ன, செய்வீர்கள்தானே?