தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

6-6.7 தொகுப்புரை

  • 6.7 தொகுப்புரை

    நாட்டுப்புறக் கைவினைக் கலைகள், கலைப் பொருட்கள் குறித்துக் கற்று அறிந்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். ஆமாம்தானே! நாட்டுப் புறங்களில் இத்தகைய கைவினைக் கலைகளும் கலைப் பொருட்களும் உள்ளனவா என்று வியந்து போயிருப்பீர்கள். அவை தமிழரின் வாழ்க்கையோடும் வழிபாட்டோடும் இரண்டறக் கலந்துள்ள உறவு கண்டு பூரித்துப் போயிருப்பீர்கள். இதுதான் நாகரிகக் கலைப் பொருட்களுக்கும் நாட்டுப்புறக் கைவினைக் கலைப் பொருட்களுக்கும் உள்ள அடிப்படை வேறுபாடு. எளிதில் கிடைக்கும் மூலப் பொருட்கள், மலிவான விலை, குறைவான உற்பத்திச் செலவு, வீட்டிலேயே தொழில் கூடம், நிறைவான வருமானம் இவை கைவினைக் கலைகளின் சிறப்புக் கூறுகளாகும்.

    நாட்டுப்புறக் கைவினைக் கலைகள் கிராமத்தின் இயற்கை அழகையும் கிராம மக்களின் எளிய வாழ்க்கை முறையையும் கற்பனைத் திறனையும் வெளிக்காட்டுவனவாகும். இக்கைவினைக் கலைகள் மரபின் படிவங்களாகும்; பண்பாட்டின் அடையாளங்களாகும்; தமிழ் மரபின் அறுந்து படாத தொடர்ச்சியாகும். இத்தகைய சிறப்பு மிக்க பாரம்பரியக் கலைகளை வாழ்விப்பதும் வளர்த்தெடுப்பதும் தமிழர்களின் கடமையாகும்.

    தன்மதிப்பீடு : வினாக்கள் - II

    1.

    இரு வகை வீணைகள் எவை?

    2.

    குதிரை எடுப்புத் திருவிழா எந்த நாட்டுப்புறத் தெய்வத்திற்காக மேற்கொள்ளப் படுகிறது?

    3.

    மரப்பாச்சி தொடர்பான நம்பிக்கை யாது?

    4.

    கைவினைக் கலைகளின் சிறப்புக் கூறுகள் எவை?

    5.

    கைவினைக் கலைத் தொழிலை வளர்க்கும் நிறுவனங்களை எழுதுக

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 10-10-2017 17:36:45(இந்திய நேரம்)