தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பாடம் - 2

C01132   பாரதிதாசனின் சமுதாயம்
 

இந்தப் பாடம் என்ன சொல்கிறது?

E

பாரதிதாசனின் பொதுவுடைமை நோக்கை இப்பாடம் எடுத்துரைக்கின்றது; சாதி வேறுபாட்டுணர்வைக் கண்டித்துச் சாய்க்கும் (வீழ்த்தும்) அவர் கவிதைகளின் சாற்றைப் பிழிந்து தருகின்றது; மத வெறியால் குலைந்து போகாதீர் என்று குரல் கொடுக்கும் அவர் பாடல்களை இனம் காட்டுகிறது. பகுத்தறிவு என்ற உலகம் நோக்கி மனித சமுதாயம் நடையிடத் தூண்டும் அவர் முழக்கங்களை எடுத்துரைக்கின்றது.


இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?

  • கவிஞன் ஒருவனின் உள்ளத்தை உணரலாம்.

  • எது சீர்திருத்தம் என அறியலாம்.

  • சமூக இருள் எது? சமூக அவலம் எது? எனப் புரிந்து கொள்ளலாம்.

  • வாழ்க்கையின் செம்மை எவற்றின் வழி எய்தப்படும் என்பதைக் கவிஞன் காட்டும் நெறியிலிருந்து தெளியலாம்.

  • புன்மை எது புரட்சி எது என விளங்கிக் கொள்ளலாம்.

  • தமிழ்ச் சமூகத்தின் நிகழ்காலம் எப்படிப்பட்டது என்றும் அச்சமூகம் எதிர்காலத்தில் எவ்வாறு இருக்க வேண்டுமென்றும் கண்டு கொள்ளலாம்.

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 01:48:37(இந்திய நேரம்)