Primary tabs
தன் மதிப்பீடு : விடைகள் - II
8.
தீவக அணியின் பெயர்க் காரணம் கூறுக.
தீவகம் என்னும் சொல்லுக்கு 'விளக்கு' என்பது பொருள். ஓர் அறையில் ஓர்இடத்தில் வைக்கப்பட்ட விளக்கானது அவ்வறையில் உள்ள பல இடங்களிலும் உள்ள பொருள்களை விளக்குதல் போல, செய்யுளின் ஓரிடத்தில் நின்ற ஒரு சொல் அச்செய்யுளின் பல இடங்களிலும் உள்ள சொற்கேளாடு சென்று பொருந்திப் பொருளை விளக்குவதால் இவ்வணி தீவக அணி எனப்பட்டது.