தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

P10244/title>-4.0 பாட முன்னுரை

  • 4.0 பாட முன்னுரை

    தமிழில் சமூக நாடகங்கள் மேடை நாடகங்களாகவும் படிக்கும் நாடகங்களாகவும் உருவாக்கப்படுகின்றன. இவற்றின் உள்ளடக்கத்திலும் அமைப்பிலும் நிகழ்த்து முறையிலும் பல மாறுதல்கள் ஏற்பட்டிருக்கின்றன. இவற்றில் பொழுதுபோக்குக் கூறுகள் இருந்தாலும் சமூகத்தின் நிலையை அவ்வப்போது உணர்த்தும் வாயில்களாகவும் இவை இருக்கின்றன. அரசியலின் ஆயுதமாகவும் இவை திகழ்கின்றன. சமூக நாடகங்களின் வரலாறு சமூக வரலாறாகவும் இருக்கிறது என்பதால் இவற்றைப் பற்றி அறிந்து கொள்வது தேவையானதாகும். சமூக நாடகங்களின் வரலாறு, விலாச நாடகம், நாவல்களை நாடகமாக்கல், பம்மல் சம்பந்தனாரின் நாடகத் தொண்டு, தேசிய நாடகங்கள், திராவிட இயக்க நாடகங்கள், சமூக உணர்வு நாடகங்கள், நவீன நாடகங்கள் முதலானவை குறித்துக் காண்போம்.

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 09:03:56(இந்திய நேரம்)