தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை






  •  

    தன் மதிப்பீடு : விடைகள் - I

     

    6)

    துன்பத்திலும் இன்பத்தைச் சுவைக்கும் பாங்கினைச் சூளாமணி ஆசிரியர் எங்ஙனம் எடுத்துரைக்கிறார்?

    யானை விரட்ட, அஞ்சி ஓடிய மனிதன் ஒருவன் ஆழமான கிணற்றில் விழும்போது அக்கிணற்றில் கொடிய பாம்புகள் இருப்பதைக் கண்டு ஒரு கொடியைப் பற்றித் தொங்கினான். மேலே மதயானை, கீழே விஷநாகம், இரண்டுக்கும் இடையே அஞ்சிச் சாகும் அம்மனிதன் வாயில் ஒரு தேன் துளி விழுகின்றது. தான் இறப்பது உறுதியென்ற உண்மை அறிந்த நிலையிலும் தன் வாயில் விழுந்த தேன் துளியைச் சுவைத்து இன்புறுகிறான் அவன். இக்கதை மூலம் துன்பத்துக்கு இடையிலும் இன்பம் தேடும் மனித முயற்சியை ஆசிரியர் விளக்குகிறார்.



Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 09:59:53(இந்திய நேரம்)