Primary tabs
-
தன் மதிப்பீடு : விடைகள் - II
1)
வீரத்தாயில் கல்வியின் சிறப்பு எவ்வாறு எடுத்துரைக்கப்படுகிறது?கல்வியில்லாதவன் நடைப்பிணத்துக்குச் சமமானவன் என்றும் கல்வியில்லாதவனால் இந்த உலகிற்கு எந்த நன்மையும் தர இயலாது என்றும் குறிப்பிடுகிறார். அதேநேரத்தில், ‘அறிவு பெற்றபடியாலே எல்லாம் பெற்றீர்! ‘தக்க நல்லறிஞர் இன்றித் தரணியும் நடவாதன்றோ! எல்லார்க்கும் கல்வி, சுகாதாரம் வாய்த்திடுக என்றும் கல்வியின் மேன்மையினைச் சொல்கிறார் பாரதிதாசன்.