தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை






  •  

    தன் மதிப்பீடு : விடைகள் - II

    3)

    வீரத்தாயில் காணலாகும் பொதுவுடைமைக் கருத்துகளை எழுதுக.

    மக்கள் அனைவரும் சமமானவர்கள். எல்லோருக்கும் எல்லாமே பொதுச் சொத்துக்கள் எனும் பொருளியல் கொள்கையில் தீவிர நம்பிக்கை கொண்டவர் பாரதிதாசன். இதனை வீரத்தாயில் வீரமகனான சுதர்மன் மூலம் வெளிப்படுத்திக் காட்டுகிறார்.

    ‘எல்லார்க்கும் தேசம்; எல்லார்க்கும் உடைமை எலாம்
    எல்லார்க்கும் எல்லா உரிமைகளும் ஆகுகவே’

    என்று மணிபுரியை ஆளும் உரிமை இனி மன்னனுக்கில்லை, அனைத்து மக்களுக்கும் தான் என்று குடியரசுக்குட்படுத்தும் அரசியல் பிரகடனத்தைக் காண முடிகிறது.



Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 11-07-2018 12:44:39(இந்திய நேரம்)