தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை






  •  

    தன் மதிப்பீடு : விடைகள் - I

    6)

    சாதி வேறுபாட்டினைக் கவிஞர் எவ்வாறு கண்டிக்கிறார்?

    ‘சாதிக் காடுகளை வெட்டிச் சாய்க்க வேண்டும்’ என்று சேரிப் பெண்கள் கும்மியில் தம் கண்டிப்பினை வெளிப்படுத்துகிறார்.     

    சாதியை வகுத்து நம்மைப்
    பாழ்செய்த தடியர் கூட்டம்

    என்று சாடியுள்ளார்.

    சாதிப்பெயர்களை ஒழிக்கவேண்டும்; ஆண்பெண் இணைந்தது மானுடம். சாதிப் பூட்டை உடைத்தெறிந்து விரும்பியவனையே துணைவனாக அடைய வழி வகுக்கிறார் கவிஞர்.

    ‘காதலுக்குத் தொலைதூரம் சாதிமதம்’ என்று கொடிமுல்லையில் பேசுவதன் மூலம் சாதிச்சனியனை ஒழிக்கும் நோக்கத்திலேயே தமது படைப்பினை வெளிப்படுத்தியிருக்கிறார்.



Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 10:06:21(இந்திய நேரம்)