தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை






  •  

    தன் மதிப்பீடு : விடைகள் - II

     

    2)

    ‘காதல்’ பற்றிய கவிஞர் கண்ணதாசனின் கருத்துகளுக்குச் சான்று தருக.

    மாங்கனியின் கண் சுழற்சியில் அகப்பட்ட தலைவன். காதல் சுமையை இறக்கி வைக்க இயலாமல் நெஞ்சம் சோர்ந்ததாக,

    தலையிருக்கும் பாரத்தை இறக்கிவைக்க
    வழியிருக்கும் சாலைதனில்; ஆனால் காதல்
    குலையிருக்கும் நெஞ்சத்தின் பாரமொன்றும்
    குறையாதென்று அரற்றினான் கொற்ற வீரன்

    என்றும்,

    மாங்கனி என்றான் வீரன்; மாங்கனி காதல் மீறித்
    ‘தாங்குவீர்’ என்றாள்! தாங்க, தளிர்க்கொடி சுற்றிக்
                 கொண்டாள்’

    என்றும் காதல் பற்றிய நிகழ்வுகள் குறிப்பிடப்பட்டுள்ளன.



Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 10:08:00(இந்திய நேரம்)