Primary tabs
-
தன் மதிப்பீடு : விடைகள் - II
6)
மாங்கனியில் காணலாகும் காப்பியத் தாக்கத்தினைப் புலப்படுத்துக.
சிலப்பதிகாரமும் மணிமேகலையும் இணைந்த வடிவமாக மாங்கனி அமைக்கப்பட்டிருக்கின்றது. சிலம்பில் வரும் மாதவியைப் போல, - மாங்கனியும், மணிமேகலையில் வரும் காவியத்தலைவி மணிமேகலை போலப் பொன்னரசியும் படைக்கப்பட்டிருக்கிறார்கள். இந்த இரண்டு முக்கியப் பாத்திரப் படைப்புகளின் மூலம் காப்பிய நிகழ்வுகளை நமக்கு அறிவுறுத்துகிறார் கவியரசு கண்ணதாசன். அதேபோல, சங்க இலக்கிய அகப் பாடல்களில் வரும் காதல் பற்றிய நிகழ்வுகளும் மாங்கனியில் பேசப்படுகின்றன என்பதையும் அறியமுடிகிறது.