Primary tabs
P10446 கைக்கிளை, பெருந்திணைப்
பாடல்கள்- அறிமுகம்
இந்தப் பாடம் சங்க இலக்கியத்தில் அமைந்துள்ள கைக்கிளை, பெருந்திணைப் பாடல்களின் அறிமுகம் பற்றியது.
கைக்கிளையின் விளக்கம், கைக்கிளை மரபு, கைக்கிளை பாடிய புலவர்கள், சங்க அக இலக்கியங்களிலும் புற இலக்கியங்களிலும் கைக்கிளை அமைந்துள்ள விதம் ஆகியவற்றை இப்பாடம் விவரிக்கிறது.
பெருந்திணையின் விளக்கம், பெருந்திணை மரபு,
பெருந்திணை பாடிய புலவர்கள், சங்க இலக்கியங்களில்
பெருந்திணை அமைந்துள்ள விதம் ஆகியவற்றையும்
இப்பாடம் விவரிக்கிறது.
பெறலாம்?
இந்தப் பாடத்தைப் படித்து முடிக்கும்போது நீங்கள் கீழ்க்காணும் திறன்களையும் பயன்களையும் பெறுவீர்கள்.