P20215 - சிற்றிலக்கியங்களும் தனிப்பாடல்களும்
சைவ சமயம் சார்ந்து எழுந்த பல்வேறு சிற்றிலக்கிய வகை நூல்களையும் அவற்றின் ஆசிரியர்களையும் சுருக்கமாக இந்தப் பாடம் அறிமுகம் செய்கிறது.
சைவச் சிற்றிலக்கியங்கள் புதிய இலக்கிய வடிவங்களைத் தமிழ் மொழிக்குத் தந்துள்ளதை இப்பாடம் குறிப்பிடுகிறது. பெரும்பாலான சிற்றிலக்கிய வகைகளின் முன்னோடிகளாகச் சைவச்சமயச் சான்றோர் விளங்கியமையை எடுத்துரைக்கிறது.
சைவச் சிற்றிலக்கியங்கள் பலவும், திருமுறைகளுக்கு நிகராக சைவ மக்களால் போற்றப்படுகின்றன. அவை பாராயண நூல்களாகவும் விளங்குவதை இந்தப் பாடம் சுட்டுகிறது.
மேலும் அருணகிரிநாதர், குமரகுருபரர் போன்ற பல்வேறு அருளாளர்களின் நூல்களைப் பற்றிய சிறப்புகள் விரித்துரைக்கப்படுகின்றன.
தமிழ் இலக்கிய வளர்ச்சி வரலாற்றில் சைவ சமய
இலக்கியங்களின் தோற்றத்திற்குச் சிவாலயங்களே மூலமாக
அமைந்துள்ளன என்பதை இனங்காணலாம்.
தமிழில் கிளைத்த புதிய இலக்கிய வடிவங்கள் சைவச் சார்பாகவே கிடைத்துள்ளன
என்பதை அறிந்து தமிழ் இலக்கிய வளர்ச்சியில் சைவ சமயத்தின் பங்களிப்பைக்
கணிக்கலாம்.
தனிப்பாடல்கள் வழி சைவ சமயம் பற்றிய கருத்துகளைத் தொகுத்துக் கொள்ளலாம்.

Tags :
CONTACT INFO
தமிழ் இணையக் கல்விக்கழகம்
அண்ணா பல்கலைக்கழக வளாகம்
காந்தி மண்டபச் சாலை
கோட்டூர்
சென்னை – 600 025.
தொலைபேசி : 91-44-2220 9400
இயக்குநர் : 91-44-2230 1017
நிகரி : 91-44-2220 9405
மின் அஞ்சல் : tva[at]tn[dot]gov[dot]in
ABOUT WEBSITE
USEFUL LINKS
VISITORS MAP
பதிப்புரிமை @ 2017, தமிழ் இணையக் கல்விக்கழகம்
www.tamilvu.org பயன்படுத்தி, நீங்கள் உங்கள் சாதனத்தின் குக்கீகளை வைக்க முடியும் என்பதை ஒப்புக்கொள்கிறேன். விவரங்களுக்கு எங்கள் தனியுரிமை மற்றும் கொள்கைகள் பார்க்கவும்.