Primary tabs
-
தன் மதிப்பீடு : விடைகள் - I
4)
இதழியல் சுதந்திரத்தின் தேவை குறித்து இரண்டு கருத்துகளை எழுதுக.
(i) எல்லாச் சுதந்திரங்களின் இதயமாக இதழியல் சுதந்திரம் இருக்கின்றது. செய்திகளையும், சிந்தனையையும் சுதந்திரமாகப் பரிமாறிக் கொள்ள இயலாவிட்டால், வேறு எந்த உரிமையும் கிடைக்காமல் போய்விடும். சுதந்திர சமுதாயத்தின் தூண்களில் ஒன்றுதான் இதழியல் சுதந்திரம்.
(ii) மக்கள் தங்கள் விருப்பப்படி வெளியிடவும் செய்தித்தாட்களைப் படிக்கவும் உரிமை பெற்றிருக்க வேண்டும். ஆசிரியருக்கு நிர்வாகத்தின் தலையீடின்றிச் செயல்படும் உரிமை இருக்க வேண்டும்.