Primary tabs
-
தன் மதிப்பீடு : விடைகள் - I
1.
‘பக்க அமைப்பு’ என்பதனை எங்ஙனம் விளக்கலாம்?
தரத்திற்கும், சுவைக்கும் ஏற்ப, செய்திகளைத் தாளின் உரிய பக்கங்களில், உரிய இடங்களில் அமைக்க வேண்டும். அத்துடன் ஒரு செய்தித்தாளில் இடம்பெறும் பல்வேறு வகையான உள்ளடக்கங்களையும் (contents) அதன் திறன் அறிந்து, பொருத்தமான இடங்களில் சுவைபடத் தருவதே ‘பக்க அமைப்பு’ எனப்படும்.