Primary tabs
காட்டுகிறார்?
சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்த செய்தியைக் குறிப்பிடுவதுடன்,
திருவள்ளுவர் பற்றியும் திருக்குறள் பற்றியும் குறிப்பிடுகின்றார்,
புலவர்.
தரணிமிசை யாருக்கும் தன் தலை வணங்காத தமிழ்
வேந்து
- (66) என்றும்,
செந்தமிழ்க்குக் காவலனும் ஓர் அரிய பாவலனும்
ஆனவன்
- (9)
என்றும்,
தமிழுக்கு அமுதென்று பேரென்று கொட்டுமொரு
சப்பாணி கொட்டியருளே
என்றும் தமிழோடிணைத்துப் பாடும் அழகைப் பல இடங்களில்
காணலாம்.
சலியாத தமிழ்த் தொண்டினாற் சாதலற்றவன்
சப்பாணி கொட்டி யருளே - (34)
என்று பாடுவது புரட்சிக் கவிஞரின்
“தமிழுக்குத் தொண்டு செய்வோன் சாவதில்லை
தமிழ்த் தொண்டன் பாரதிதான் செத்ததுண்டோ”
என்ற கருத்தை அடியொற்றி எழுந்ததாகும்.