பிள்ளைத் தமிழ் நூல்களைப்
பட்டியல் இடலாம். அதன்
இலக்கணத்தைப் பற்றி அறியலாம்.
பாவேந்தர் பாரதிதாசன் கருத்துகள் சிலவற்றைத் தெரிந்து
கொள்ளலாம்.
அவரைப் பற்றிய பிள்ளைத் தமிழில் அந்தக்
கருத்துகள்
பிரதிபலிப்பதைக் காணலாம். அக்கருத்துகளைப் புலவர்
புலமைப்பித்தன் எவ்வாறு போற்றுகிறார் என்பதையும்,
அவற்றை அவர்
வெளிப்படுத்தும் முறையையும் அறிந்து
மகிழலாம்.
தமிழின் சிறப்பும் பாரதிதாசன் பெருமையும்,
பழைய தமிழ்ப்
பா வடிவத்தில் அமைந்திருப்பதைக் கண்டு களிக்கலாம்.