Primary tabs
இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனின் வேல் அவனுடைய பகை
மன்னர்களின் துளைத்தற்கரிய மார்பினைத் துளைத்ததினால்
உண்டான புண்கள் உமிழும் குருதியினால் உப்பங்கழிகளில்
உள்ள நீலமணி போன்ற நீர் தன் நீல நிறம் மாறி,
குங்குமக் கலவை போலச் சிவப்பாயிற்று என்னும் சிறப்புக்
கருதிப் பாடலுக்குப் புண்ணுமிழ் குருதி எனப் பெயராயிற்று.