Primary tabs
பதிற்றுப்பத்துப் பாடல்கள் ஆழ்ந்த கலையின்பமும்
அரிய சொல்லாட்சியும் அழகிய உவமை நயமும் கொண்டு விளங்குகின்றன. சங்க காலத்தில் வாழ்ந்த தலைசிறந்த
புலவர் பெருமக்களின் படைப்பாகப் பதிற்றுப்பத்துத் திகழ்கிறது.
ஒவ்வொரு செய்யுளின் பின்னும் அமைந்துள்ள துறை, வண்ணம்,
தூக்கு, பெயர் ஆகியவை உரையில்லாத மூலப் பிரதிகளிலும்
உள்ளன. ஆதலால் இவை பாடல் ஆசிரியர்களாலோ,
தொகுத்தாராலோ எழுதப் பட்டிருக்க வேண்டும்.
பாடல்களுக்கு உள்ள பெயர்கள் எல்லாம்
மிகச் சிறந்த
சொற்களால் கற்பனை நயத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன, சான்றாக,
புண்ணுமிழ் குருதி என இரண்டாம் பத்தின் முதல் பாடலினைக்
காணலாம்
“இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனின் வேல் அவனுடைய பகைமன்னர்களின் துளைத்தற்கரிய மார்பினைத் துளைத்ததினால்
உண்டான புண்கள் உமிழும் குருதியினால் உப்பங்கழிகளில்
உள்ள நீலமணி போன்ற நீர் தன் நீலநிறம் மாறி, குங்குமக்
கலவை போலச் சிவப்பாயிற்று என்னும் சிறப்புக் கருதிப் பாடலுக்குப்
புண்ணுமிழ் குருதி எனப் பெயராயிற்று” என்பார் முனைவர்
அ.ஆலிஸ்.
இவ்வாறு பல்வேறு பெயர்கள் மிகச் சிறந்த கற்பனை நயத்துடன்
விளங்குகின்றன.
சேர மன்னன் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனின் மனைவி
சினம் கொள்ளாது அமைந்த கற்பினை உடையவள். ஊடல்
காலத்திலும் இனிமையாகப் பேசுபவள் என்பது புலவரின் கூற்று.
ஆறிய கற்பின் அடங்கிய சாயல்
ஊடினும் இனிய கூறும் இன்னகை
(பாடல்-6, இரண்டாம் பத்து)
இந்த அடிகள் கவிஞனின் படைப்புத் திறனை விளக்கும்.
இளஞ்சேரல் இரும்பொறையின் படையுடன் போர் செய்ய
அஞ்சிய சோழப் படைகள் இரும்பொறையிடம் போர் செய்து
வெற்றி பெற முடியாது என்று தம்முடைய படைக்கருவிகளை
நிலத்தில் எறிந்தனர். அவ்வாறு எறியப்பட்ட வேல்கள் கபிலர்,
செல்வக் கடுங்கோ வாழியாதனைப் பாடிப் பெற்ற ஊரை விட
அதிகம்.
மறம்புரி கொள்கை வயங்குசெந் நாவின்
உவலை கூராக் கவலைஇல் நெஞ்சின்
நனவில் பாடிய நல்இசைக்
கபிலன் பெற்ற ஊரினும் பலவே
(பாடல்-5, ஒன்பதாம் பத்து)
என்கிறார் பெருங்குன்றூர் கிழார்.
களங்காய்க் கண்ணி நார்முடிச் சேரலின் படையோடு
பொருதுதோற்ற
பகைவர்களது யானைகளின் வெட்டப்பட்டது
திக்கைகள் பனைமரங்கள் வெட்டப் பட்டுக் கிட்ட்பன போல் வீழ்ந்து
கிடக்கும். குதிரை, யானை,
வீரர்களுடன் இறந்து கிடப்பதால்
உண்டான பிணத்தை
உண்ணுவதற்காகப் பெண் கழுகினை ஆண்
கழுகானது அணைத்துக்
கொண்டு பள்ளம் நோக்கி ஓடும். பெரிய
பிணக்குவியலைச் சுமந்து
கொண்டு பேய்கள் பிணங்களை
உண்டு மகிழும் என்கிறார்
காப்பியாற்றுக்" காப்பியனார்
இவ்வாறு கற்பனைகளும் உவமைகளும் பதிற்றுப்பத்திற்கு அழகூட்டுகின்றன.