Primary tabs
இந்தப் பாடம் சங்க இலக்கியத்தில் அமைந்துள்ள
முல்லைத்
திணைப் பாடல்களின் அறிமுகமாக அமைகிறது.
முல்லைத் திணைப்
பாடல்களின் முதற்பொருள், கருப்பொருள்,
உரிப்பொருள்
ஆகியவற்றை இப்பாடம் விவரிக்கிறது. முல்லை
நில மக்களின்
வாழ்க்கை முறைகள், பண்புகள் ஆகிய
சிறப்புகளை இப்பாடம்
எடுத்துரைக்கிறது. கற்பனை, உவமை,
சொல்லாட்சி
முதலியவற்றையும் இப்பாடம் விளக்குகிறது.
திறன்களையும் பயன்களையும் பெறுவீர்கள்.
- முல்லைத் திணைக்குரிய முப்பொருள்களை அறியலாம்.
- முல்லைத் திணையில் முதல், கரு, உரிப்பொருள்களின்
வெளிப்பாடு எவ்வாறு அமைந்துள்ளது என்பதைச் சில
சான்றுகள் மூலம் உணரலாம்.
- முல்லைநில மக்களின் வாழ்க்கை முறையில் ஏறு
தழுவல், எருமைக் கொம்பை வழிபடல், மூவினம்
வளர்த்தல், பால், மோர் விற்றல், விரிச்சி கேட்டல்,
பாசறையில் மகளிரும் பங்கேற்றல் முதலிய சிறப்பு
நிகழ்வுகள் எவ்வாறு அமைந்துள்ளன என்பதை
அறியலாம்.
- முல்லைப் பாடல்களின் இலக்கியச் சுவை பற்றி
அறியலாம்.