Primary tabs
இந்தப் பாடம் சங்க இலக்கியத்தில் அமைந்துள்ள
மருதத் திணைப் பாடல்களின் அறிமுகம் பற்றியது.
மருதத் திணைப் பாடல்களின்
முதற்பொருள், கருப்பொருள்,
உரிப்பொருள் ஆகியவற்றை இப்பாடம் விவரிக்கிறது.
மருதத் திணை உரிப்பொருளாகிய ஒழுக்கத்தின்
முக்கிய இயல்புகளை எடுத்துரைக்கிறது.
மருத நில மக்களின் சிறப்பியல்புகளை இப்பாடம்
விளக்குகிறது.
கற்பனை, சொல்லாட்சி, உவமை, உள்ளுறை ஆகிய
இலக்கிய நயங்களையும்
இப்பாடம் விளக்குகிறது.
கீழ்க்காணும் திறன்களையும் பயன்களையும் பெறுவீர்கள்.
- மருதத் திணைக்கு உரிய முப்பொருள்களை அறியலாம்.
- மருதத் திணையில் முப்பொருள் வெளிப்பாடு எவ்வாறு
அமைந்துள்ளது என்பதைச் சில சான்றுகள் மூலம்
உணரலாம். - மருதத் திணைத் தலைமக்களின் ஒழுக்கங்களான
பரத்தமை ஒழுக்கம், வாயில் மறுத்தல், புதுப்புனலாடல்,
ஊடல் தணிவித்தல், பிள்ளைத்தாலி அணிதல்
ஆகியவற்றைப் பற்றி அறியலாம். - மருதத் திணைப் பாடல்களில் காணப்படும் இலக்கிய
நயங்களான கற்பனை, சொல்லாட்சி, உவமை,
உள்ளுறை பற்றி அறியலாம்.