தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

தொகுப்புரை

4.6 தொகுப்புரை


நண்பர்களே ! இந்தப் பாடத்திலிருந்து என்னென்ன
செய்திகளை அறிந்து கொண்டீர்கள்; என்பதை மீண்டும்
ஒருமுறை நினைவுபடுத்திப் பாருங்கள்.

நெய்தல் திணையின் முதற்பொருள், கருப்பொருள்,
உரிப்பொருள் எவை என அறிந்து கொள்ள முடிந்தது.
இம்மூன்று பொருள்களும் பாடல்களில் வெளிப்படும் முறை
பற்றி அறிந்துகொள்ள முடிந்தது.

சிற்றில் கட்டி விளையாடல், கூடல் இழைத்தல், மீன்
உணக்கல், மீன் கறி ஆக்கல், இயற்கையையும் உறவாக
நினைத்தல், மடலேறுதல் முதலிய நெய்தலின் சிறப்புகளை
அறிந்து கொள்ள முடிந்தது.

நெய்தல் பாடல்களில் காணப்படும் கற்பனை, சொல்லாட்சி,
உவமை, உள்ளுறை ஆகிய இலக்கிய நயங்களைப் புரிந்து
கொண்டு.

1)

சிற்றில் என்றால் என்ன?

2)
ஊதை என்பதன் பொருள் யாது?
3)
கூடல் இழைக்கும்போது வட்டங்களின்
இரட்டைப் படை எதனை உணர்த்தும்?
4)
பண்டமாற்று என்றால் என்ன?
5)
புன்னையின் நறுமணம் எதனைப்
போக்குகின்றது?
6)
அயிலை மீன் புளிக்கறியைக் குறிப்பிடும்
புலவர் யார்?
7)
மகளின் தங்கையாகத் தாய் எதனைக்
கூறுகிறாள்?


Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 02-09-2016 21:32:19(இந்திய நேரம்)