தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

2.5- தொகுப்புரை

2.5 தொகுப்புரை


    தமிழ் மொழி வழியாகச் சமண சமயக் கருத்துகளை
மக்களிடம் பரப்பும் முயற்சியில் சமணர்கள் ஈடுபட்டார்கள்.
இதன் பொருட்டுத் தமிழைக் கற்கத் தொடங்கிய அவர்கள் புதிய
இலக்கண நூல்களையும் காப்பிய நூல்களையும் நிகண்டு
நூல்களையும் உருவாக்கினர். பிற சமயத்தார் செய்த தமிழ்ப்
பணியைக் காட்டிலும் இவர்களின் பங்களிப்பு சிறப்புடையதாகும்.
தமிழ் இலக்கியங்களில் பரவலாகச் சமணர்கள் பற்றிய பதிவுகள்
காணக் கிடக்கின்றன; சைவ, சமண சமயங்களுக்கிடையே சமயப்
போர் நிகழ்ந்த வரலாறுகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.


தன்மதிப்பீடு : வினாக்கள் - II

(1)
தொல்காப்பியம் குறிப்பிடும் உயிரின வகைப்பாடு
எத்தனை?
(2)
உலக உயிர்களைச் சமண சமயம் எத்தனை
வகையாகக் கூறும்?
(3)
மதுரைக்காஞ்சி சமண சமயம் பற்றிக் குறிப்பிடுவது
என்ன?
(4)
சங்க நூல்களில் காணலாகும் உலோச்சனார்
பாடல்களின் எண்ணிக்கை எத்தனை?
(5)
வடக்கிருத்தல் என்றால் என்ன?
(6)
சைவத்திலிருந்து சமணத்திற்கு மாறிய சைவப்
பெரியார் யார்?

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 02-09-2016 22:14:26(இந்திய நேரம்)