Primary tabs
(இ-ள்.) சிலை பயில் வயிரத் தோளாய் - விற்றொழிலைப் பயின்ற திண்ணிய தோள்களையுடைய சண்டகருமனே, செப்பிய பொருள் இது எல்லாம் - (இல்லறத்தார்க்கு உரியவெனக்) கூறிய இவை அனைத்தும், உலைதல் இல் மகிழ்வோடு - சஞ்சலமில்லாத மகிழ்வுடன். உள்ளத்து - --, உணர்ந்தனை கொள்க என்ன - உணர்ந்து கைக்கொள்வாயாக என்று முனிவரர் கூற, (தளவரன் அவரை நோக்கி), அடிகள் - அடிகளே! அலைசெய்வது ஒழியின் - (உயிர்களைக்)கொல்லுந் தொழிலைக் கைவிடுவேனாயின், வாழ்க்கை அழியும் - என் வாழ்க்கை கெட்டழியும்: (ஆதலின்), கொலையினில் ஒருவல் இன்றி - கொலைத்தொழில் ஒன்றுமட்டும் தவிர்தலின்றி, அருளிற்று எல்லாம் - தாங்கள் (இல்வாழ்வானுக்கு) அருளிய ஏனைய விரதங்களனைத்தும், கொண்டனென் - ஏற்றுக்கொண்டேன், என்றான் - என்று கூறினான்.
முனிவரர், தோளாய் ! யான் கூறிய விரதங்களை மேற்கொள்க என்று பணிக்க, என் பிழைப்புநிமித்தம் கொலையை விடுதல் இயலாது. அது தவிர ஏனைய விரதங்களை ஏற்றுக் கொண்டே னென்றா னென்க.
சிலை பயிலுதல் - வில்வித்தையில் பழகுதல். ‘இது எல்லாம், ‘ஒருமைப் பன்மை மயக்கம். உணர்ந்தனை, முற்றெச்சம். உயிரை அலைத்தே கொலை புரிவதனால், ‘அலை செய்வது‘ என்றான். (20)
முனிவரர் மீண்டும் கூறல்
(இ-ள்.) (ஐயனே), ஆர் உயிர் வருத்தம் கண்டால் -(துன்பம் பொறுத்தற்கு) அரிய உயிர்கள் படும் வருத்தத்தைக் கண்டால்,
1 தொழுகு
2 துருகினைந
3 வாரியில
4 மரசவிவ
5 வதம.