தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

சிரிக்கும் பூக்கள்
iv

கிரேக்கப் பழங்கதையில் ‘ஸ்பிங்ஸ்’ எனும் மனிதத் தலையும் சிங்க
உடலும் கொண்ட ஒரு விலங்கு இடம் பெற்றுள்ளது. அது ஒடிபசு என்னும்
வீரனிடம், “முதலிலே நான்கு கால்; இடையிலே இரண்டு கால்; முடிவிலே
மூன்று கால் கொண்டவர் யார்?” என்று கேட்டபோது ஒடிபசு ‘மனிதன்’
எனச் சரியான விடை கூறியதால், தன் விடுகதைக்கு மனிதன் ஒருவன்
விடையளித்து விட்டானே என்ற வருத்தத்தால் அவ்விலங்கு உயிரை
விட்டுவிட்டதாம். கிரேக்கப் பெருங்கவிஞர் ஹோமர், தாம் ஒரு விடுகதையை
விடுவிக்க முடியாததற்காக நாணமுற்று உயிர் துறந்தார் எனக் கூறப்படுகிறது.
எனவே, விடுகதைகள் முற்றிலும் குழந்தைகட்காகவே உரிய இலக்கியவகை
எனக் கூறமுடியாது.

கி.பி.16-ஆம் நூற்றாண்டளவில் ஒளவையார் ஆத்திசூடி, கொன்றை
வேந்தன், மூதுரை, நல்வழி என்ற நூல்களையும், அதிவீரராம பாண்டியன்
வெற்றிவேற்கை எனும் நூலையும் பாடியுள்ளனர். 18-ஆம் நூற்றறாண்டின்
பிற்பகுதியில் தோன்றிய உலகநாதர் உலக நீதியைப் பாடினார். இவை
குழந்தைகட்குக் கற்பித்து வரப்படுகின்றன என்றாலும், இன்று நாம்
கண்டுவரும் குழந்தை இலக்கிய வகையில் இவை அடங்குமெனக்
கூறுதற்கில்லை.

குழந்தை இலக்கியத் தோற்றம்

குழந்தைகட்கே உரிய, குழந்தைகள் பாடியும் ஆடியும் பயன்கொள்ளத்
தக்க கவிதைகள் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில்தான் எழுந்தன.
கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளையவர்கள்
 


புதுப்பிக்கபட்ட நாள் : 06-09-2016 03:47:36(இந்திய நேரம்)