தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

முன்பக்கம்-ஆசிரியர் முன்னுரை

சிரிக்கும் பூக்கள்

ஆசிரியர் முன்னுரை

காரைக்குடியில் நாங்கள் வசித்த வீட்டிற்கு எதிர் வீட்டில்
அண்ணாமலை என்ற ஆறு வயதுச் சிறுவன் இருந்தான். பள்ளிக்கூட நேரம்
தவிர, மற்ற வேளைகளில் அவன் எங்கள் வீட்டிற்கு வந்து மற்றக்
குழந்தைகளுடன் ஆடிப் பாடி ஆனந்தமாக இருப்பான்.
அண்ணாமலையைப் பார்த்தவுடனே எல்லாக் குழந்தைகளும்,

           அண்ணாமலை, அண்ணாமலை,
           அண்ணாந்து பார்த்தால்
           ஒண்ணுமி்ல்லை

என்று பாடி அவனைக் கேலி செய்வார்கள். இதைக் கவனித்துக்
கொண்டிருந்த நான், ஒருநாள், “அண்ணாந்து பார்த்தால்
ஒண்ணுமி்ல்லையா?” என்று கேட்டுவிட்டு,

          அண்ணாமலை அண்ணாமலை
          அண்ணாந்து பார்த்தான்;
          ஆடி ஆடிப் பறக்கும் பட்டம்
          அண்ணாந்து பார்த்தான்.


என்று தொடங்கி,

அண்ணாமலை முன்னாலே என்ன பார்த்தான், பின்னாலே என்ன
பார்த்தான் என்று விவரித்து ஒரு பாட்டைப் பாடினேன். அந்தப் பாட்டை  


புதுப்பிக்கபட்ட நாள் : 26-02-2019 18:45:35(இந்திய நேரம்)