தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்


எட்டு நாளாய்ப் பேசவில்லை

இரண்டு பெண்கள் கிணற்றுக்குள்ளிருந்து குளித்துக் கொண்டிருக்கிறார்கள் ! அவர்களுள் ஒருத்தியின் காதலன் அவர்களைக் கண்டும் காணாதது போலப் போகிறான். அதைப் பார்த்த காதலி தனது தோழியிடம் தனியாகப் பருத்தி விளைக்குள்ளிருத்த தன்னை அவன் மெல்ல அழைத்ததை கூறுகிறாள். தோழி, 'அப்படியானால் இப்போழுது அவன் கோபித்துக்கொண்டு செல்வதேன்? ' என்று கேட்கிறான். ' அது பெரிய விஷயமல்ல. சிறு சச்சரவினால் ஏற்பட்ட ஊடல் ' என்கிறாள் காதலி.

காதலி:
பால் போல் நிலாவடிக்க
பருத்திக்குள்ள நானிருக்க
மின்னுவெட்டான் பூச்சி போல-அவன்
மெல்ல வந்து கூப்பிட்டானே
தோழி:
இரும்பாலே கிணறு வெட்டி-நீ
இருந்து குளிக்கையிலே
கரும்பான அத்தை மகன்
கையலைச்சுப் போரானடி
காதலி:
ஆத்துல ஊத்துத் தோண்டி
அவரும் நானும் பல் விளக்க
எச்சித்தண்ணி பட்டுதுன்னு-என்னோட
எட்டு நாளாப் பேசலியே

வட்டார வழக்கு: மின்னுவெட்டான் பூச்சி-மின் மினி; கையலைச்சு-கைவீசி; ஆத்துல, ஊத்து-ஆற்றில், ஊற்று.

சேகரித்தவர் :
S.M. கார்க்கி

இடம் :
சிவகிரி,
திருநெல்வேலி மாவட்டம்.




Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 06-09-2016 05:15:06(இந்திய நேரம்)