தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்


அலுக்கி நட என் சாமி

உழுது முடித்து விட்டு வீட்டுக்கு உழவன் வருகிறான். அவன் களைப்பைப் போக்கி உற்சாகமூட்டுவதற்காக அவன் மனைவி அவனைப் புகழ்ந்துப்பாடி, நிமிர்ந்து நடந்து தங்க டைய அரண்மனைக்கு வரும்படி அழைக்கிறாள். அவர்களுடைய வீடு சிறு குடிசையாயினும் அவர்களுக்கு அது அரண்மனைதான். அவளுக்கு அவன் ராஜா. அவனுக்கு அவள் ராணிதானே!

வெள்ளிக் கலப்பைகளாம்
வெங்கலத்து மேழிகளாம்
வட காடு உழுது வரும்
வஞ்சிக் கொடி என் சாமி
மத்தியானம் மாடு விட்டு
மாட்டுக் கெல்லாம் கூளம் போட்டு
சாட்டக் கம்பு தோளிலிட்டு-என்
சாமி வரக் காணியளோ?
கிறிச்சு மிதியடியாம்
கீகண்ணுப் பாருவையாம்
அலுக்கி நட எஞ்சாமி-நம்ம
அரண்மனைக்குக் கெச்சிதமே

சேகரித்தவர்:
S.M. கார்க்கி

இடம்:
சிவகிரி,
நெல்லை மாவட்டம்.



Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 06-09-2016 05:19:07(இந்திய நேரம்)